சுக்கான் காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மைக்குழலே நீகேளாய் வாதமறும் பித்தமென்பார்
சுக்கான்காய் வற்றலது தொல்லுலகில் - கைக்கின்ற
வாயுவை நீக்கும் வருமருசி போக்கிவிடும்
நீயும் அறிவாய் நிசம்

- பதார்த்த குண சிந்தாமணி

சுக்கான் காய், வாதத்தைப் போக்கும்; இது பித்த குணமுடையது; வற்றலால் வாதம், உணவில் வெறுப்பு நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-22, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே