என் சிங்காரி

என் சிங்காரி.

சிந்தனையில் ஒரு
சிங்காரி,
தேடி அலைந்தேன்
அவளை நான்.

சிக்கினாள் ஒருநாள்
என் கண்களில்,
அழைத்து வந்தேன்
அவளை நான்.

வந்தவளோ சிலகாலம்
வாழ்ந்து விட்டு,
சென்றுவிட்டாள்!
இங்கு என்னை
தனியே விட்டு விட்டு.

அவள் விட்டுச் சென்ற
என் செல்வங்களும்,
வளர்ந்து
கூட்டை விட்டு
சென்றதன்றோ!

வருவாளோ மீண்டும்
என் கண்மணி?
இல்லை,
அவளை நான்
பார்ப்பதற்கு,
இறைவன் என்னை
அழைப்பானோ!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (12-May-22, 1:01 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : en singari
பார்வை : 83

மேலே