இருக்கத்தான் செய்யும்

இயற்கையின் படைப்பில்
அனைத்துமே அசல் தான்
ஒவ்வொரு பூவும்
இலையும் கூட
வித்தியாசமானது

உலகில் பல கோடி மக்கள்
உயிர் வாழ்ந்தாலும்
ஒருவரைப்போல
வேரொருவரும் இருப்பதாக
சொல்ல முடியுமா?

இயற்கையின் மூலம் எது
எவருக்கு தெரியும் ?
இரகசியம் இருக்கும் வரை
வியப்பும் எப்போதும்
இருக்கத்தான் செய்யும்

எழுதியவர் : கோ. கணபதி. (13-May-22, 12:33 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : irukathan seiyum
பார்வை : 22

மேலே