அற்புதமான காதல் கவிதை

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❤️❤️🧡💛💚💙💜🖤🤎❤️🧡

பெண்ணே!
நீ
நிலவானாலும்
சூரியன் ஆனாலும்
உன்னையே ரசிப்பேன்..!

முள்ளானாலும்
மலரானாலும்
உன்னையே
தீண்டுவேன்.... !

புயல் ஆனாலும்
தென்றல் ஆனாலும்
உன்னையே தேடுவேன்....!

மழையாலும்
வெயிலானாலும்
உன்னையே விரும்புவேன் ....!

கனியானாலும்
காயானாலும்
உன்னையே சுவைப்பேன்....!

இருளானாலும்
ஒளியானாலும்
உன்னையே தொடர்வேன்....!

பாலானாலும்
நஞ்சானாலும்
உன்னையே பருகுவேன்...!!!❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

தவம் செய்யாமலே
நான் பெற்ற வரம்
நீ தானடி....!

கடலில் மூழ்காமலே
நான் எடுத்த முத்து
நீ தானடி ....!

எழுதாமலே
நான் படித்தக் கவிதை
நீ தானடி...!

வரையாமலே
நான் ரசித்த ஓவியம்
நீ தானடி......!

செதுக்காமலே
நான் வாங்கிய சிலை
நீ தானடி.....!

புண்ணியம் செய்யாமலே
நான் பார்த்த சொர்க்கம்
நீ தானடி .....!

அழிக்காமலே
நான் சுவைத்த தேன்
நீதானடி ....!

போட்டியில் ஜெயிக்கமலே
நான் பெற்ற பரிசு
நீ தானடி ....!

அலைந்து தேடாமலே
நான் பெற்ற புதையல்
நீ தானடி....!

*கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-May-22, 9:55 pm)
பார்வை : 80

மேலே