PALLIKKE PALAN

சுவரோரம் ஊர்ந்த பல்லி
சிறு பூச்சியை கவ்வி விழுங்கி
உண்டது
கதவோரம் சென்ற பல்லி
கதவிடுக்கில் மாட்டி
வால் அறுந்திட
பல்லி அப்பால் ஓடியது
அறுந்த வால்
உணவின் பலன் கிடைக்காமல்
துடித்தது

பல்லி விழுந்த பலன் பஞ்சாங்கத்தில்
இருக்கும்
இது பல்லிக்கே கிடைத்த பலன்

எழுதியவர் : KAVIN CHARALAN (14-May-22, 10:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே