கவி துளிகள்

கவி துளிகள்

வயதை முடிச்சில்
முடித்து
வைத்து
இன்னும் தன்னை
இளமையாகத்தான்
காட்டி கொண்டிருக்கிறது
வேப்ப மரம்


ஒரு கண்ணாடியில்
என் முகம்
பார்க்க முயற்சித்தேன்

கீழே விழுந்து
சுக்கலாய் ஆன
பின்னால்
அதில் தெரிந்தது
என் முகங்கள்
ஆயிரமாய்

ஒற்றையாய்
நின்று
யாரையோ
எதிர்பார்த்து
காத்திருக்கிறது
பனை மரம்

கிணற்றுக்குள்
தவறி விழுந்த
நிலவு

வெளிச்சத்தை
வெளியில் பரப்பி
தன்னை தூக்கி
விடும்படி
சமிக்ஞை காட்டுகிறது

மலை சரிவு
ஒன்று
முகத்தை
மேகங்களால்
முக்காடிட்டு
முகத்தை மறைத்து
கொண்டாலும்

காற்று வந்து
அவ்வப்போது
விலக்கி பார்த்து
விட்டுத்தான்
செல்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-May-22, 4:48 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kavi thulikal
பார்வை : 100

மேலே