ஜாஸ்மின்

டேய்ய்ய்.. பாரதி.. என்னடா இங்க உக்காந்து இருக்க.. போகலயா???
இல்ல சார்.. நான் போகல…
டேய்ய்.. Viscom department ல இருந்து யாருமே போகலனா கண்டிப்பா நல்லா இருக்காது.. நீயாச்சும் போ.. visual communication மானத்த காப்பாது..
அப்டி இல்ல சார்.. எந்த கண்டண்ட்டும் இல்லாம எப்டி சார்..
உனக்கு தோணுரத வரஞ்சி வச்சிட்டு வா.. நீ கலந்துகிட்டாலே போதும்..

(பேப்பர் பென்சில் எதுவுமே இல்லாம ஓவிய போட்டிலில் கலந்துகொள்ளும் விசுவல் கம்யூணிகேசன் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான்..)

ஓவிய போட்டி தொடங்கி அரைமணி நேரம் ஆகிட்டு..

மேம்..

வா பாரதி…

கண்டண்ட் என்ன??

Social awareness..
என்ன இபோ வந்து கண்டண்ட் கேக்குற.. எல்லோரும் வரஞ்சிகிட்டு இருக்காங்க??

இல்ல மேம்.. அங்க கோலர் தொல்ல தங்க முடியல.. யாரச்சும் ஒரு ஆள் கலந்துகங்கடா.. கலந்துகங்கடானு சொல்லி இங்க அனுப்பிட்டாரு..

டேய்.. கோலார்னு சொல்லாத சொல்லிருகேன்ல..

பின்ன என்ன மேம். எப்போ class விட்டு வெளில வந்தாலும், டேய்ய்.. கோலார் கொடுத்துடாதிங்கடா, கோலார் கொடுத்துடாதிங்கடானு சொல்லிடே இருக்காரு.. அதான் எல்லோருமா சேர்ந்து குமார்’ர தூக்கிட்டு கோலார்னு வச்சிட்டோம்..

அட பாவிங்களா…


(முதல்ல Joy faith இந்த மேம் பத்தி சொல்லியே ஆகணும், இவங்க என் அக்கவோட பிரண்ட்..
அவங்க சொல்லிதான் நான் இந்த காலேஜ்’லயே நான் சேர்ந்த்தேன்… ரொம்ப நல்ல மேடம்., எந்த அளவு நல்ல மேடம்னா, லஞ்ச் பீரியர்ட்ல காலேஜ்ல இருந்து 1 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஒயின் ஷாப்ல ஒரு பீர் வாங்கி நான், வாசு , உதயபிரகாஷ் மூணு பேரும் குடிச்சிட்டு ஒன்னுமே தெரியாதது போல திரும்ப கல்லூரி வகுப்பிற்க்குள் நுளையும் போது, பாரதி “perfume” வாசனை தூக்கலா இருக்கு மரியாதையா லாஸ்ட் பொஞ்ச்ல போய் உக்காருனு சொல்ற லெவல்க்கு நல்ல மேடம்.. I love you madam’னு சொல்லிட்டு நகரும் போது அப்டி ஒரு சந்தோசம் )


சரி.. கதைக்கு வருவோம்..

மேம்.. என்கிட்ட drawing பன்ன எந்த ஒரு equipment’m இல்ல.. ஸோ.. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு லேட்டா போறேன்..

முரச்சிகிட்டே போய்
இந்தானு சொல்லி ஒரு பென்சில் அண்ட் ஒரு சாட் பேப்பர் கொடுத்கு ஏதாவது வரஞ்சி கொடுத்துட்டு போனு சொன்னாங்க..

உள்ள போய் நமக்குனு ஒரு இடத்த தேடி புடிச்சி.. என்ன வரையலாம்னு யோசிச்சா ஒன்னுமே தோன மாட்டேங்குது..

எனக்கு எரிரே “பொண்னு” ஒருத்தி கலரும் அப்டி தான்… அவிழ்த்து விட்ட முடி மேல சுத்திட்டு இருந்த காத்தாடிக்கு கூத்தாடிகொண்டிருந்தது..
நெற்றியில் இருந்து கற்றையாக விழும் முடியை காதோரம் தள்ளிவிட கூட நேரமில்லாமல் வரைந்து கொண்டிருந்தாள்..
அந்த கொத்து முடிமேல அவ்ளோ கோவம் எனக்கு.. அவ மூகமும் சரியா தெரியல.. அவளும் அந்த முடியை சரிசெய்யவும் இல்ல.. திரும்பி பார்க்க கூட மாட்டேங்க்றா.. சிலை மாதிரி sorry பொண்சிலை மாதிரி அப்டியே இருக்கா…

படிச்சிட்டு எக்ஸாம் எழுதுரவங்க மத்தியில படிக்காம ரெண்டு பேப்பர் எழுதிட்டு வேடிக்கை பார்க்கும் மனநிலை எனக்கு..

அவள நான் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன்..
Joy faith மேம் என்னைய பார்த்துட்டு இருந்தாங்க.. அவங்க கண் சைகையால ஏதாவது வரடானு சொல்ல..

என்ன “மயிர” வரையிரது… மனசுகுள்ள நெனச்சிகிட்டேன்..

எதுக்க உக்காந்து இருக்காளே இவ மயிர வேணும்னா வரையலாம்.. மயிர மட்டும் தான் வரையலாம்.. அதான் ஈசியும் கூட.. மனசுகுள்ள சிரிச்சிகிடேன்…

ஒரு வழியா அவள வரைய ஆரம்பிச்சேன்..
கண்ணத்துல வச்சிருந்த ஒரு கை பாதி முகத்தையும், அந்த கைய அவளது கூந்தலும் மறைச்சிருந்தது… மீதி பாதி முகம்.. காதோரம் ஒரு பெரிய வெள்ளி வளையம்.. கண்ணுல அப்டி ஒரு எனர்ஜி அவளது ஒவ்வொரு சிமிட்டலிலும்..
உதட்டுல கொஞ்சமா சாயம் பூசியிருக்கா.. அதயும் அடிக்கடி மேல் பல்லால கடிக்கிறாள்.. கருப்பு வெள்ளை கலந்த சுடிதார். துப்பட்டா மேல ஊஞ்சல் ஆடும் ஐடி கார்ட்.. கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு..
இப்டி ஒண்ணு ஒண்ணா ரசிச்சி வரஞ்சிட்டு இருக்கும் போது..

என் பின்னால் இருந்து காதை பிடித்து செல்லமாக திருவிய joy faith மேடம்.. ச்ச்ச்ஸ்ஸ்ஸ்னு நான் சிணுங்க கருப்பு சுடிதாரிடம் இருந்து சின்ன அசைவு..
தலைய உயர்த்தாமல் உதட்டோரம் சிரு புன்னகை.. அதும் கொஞ்ச நேரம் தான்.. மீண்டும் உதடை கடிக்க தொடங்கிட்டாள்..
அவள் ஓவிய போட்டி வெறிக்கு ஓர் அளவே இல்லாதது போல் வரைந்து கொண்டே இருந்தாள்..

“ஒரு ஓவியமே ஓவியம் வரைகிறதே…

அடடெ…! மூண்று புள்ளி ஒரு ஆச்சரிய குறி..!

இப்டி சொன்னா கண்டிபா ரசிக்க மாட்டா காரி மூஞ்சில துப்பிடுவா..

பிரம்மன் வரந்ததாலோ என்னவோ.. பிக்காசோ வரைய மறுத்துவிட்டார் உன்னை.. அவ காதுல மட்டும் கேக்குற மாதிரி சொன்னேன்..

ஜெஸ்ட் ஒரு லுக்..

அவ்ளோ தான்.. அந்த கண்ணுல என்ன வச்சிருந்தாலோ தெரியல.. அவ்ளோ அர்த்தம்..
அர்த்தம் பின்வருமாறு..

1.மூடிகிட்டு போடா..
2.ஹே.. செம்ம டா..
3.வழியாத..
4.நைஸ்..
5.பார்ரா.ம்ம்ம்ம்..

ஹாஹா… நான் என்ன அர்த்தமா இருக்கும்னு யோசிச்சிட்டே இருந்தேன்..

அவ ஓவியத்துக்கு கலர் அடிக்க ஆரமிச்சிட்டா..
நான் அவள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன்..

ஒரு வழியா அவ பாதி முகத்தையும் மீதி முடியையும்.. வரஞ்சி முடித்தேன்..

Joy faith மேம் என்ன பார்த்து., முடிச்சிட்டியா..? அங்க கொண்டு போய் டேபில் மேல வைனு சொல்ல..

தெய்வமே… நல்லா இருப்பீங்க ஆள விடுங்கனு சொல்லிட்டு கையோட அந்த படத்தையும் சுருட்டி எடுத்துகிட்டு கிளம்பிட்டேன்..

கல்லூரி வராண்டாவில் நடந்து வரும் போது

ஹலோ சீனியர்..

திரும்பி பார்த்தா அட அதே பொண்னு..

(நான் தான் கடமைக்கு வரைய வந்தேன்.. இவ நல்லா தானே வரஞ்சிட்டு இருந்தா ஏன் இவ்ளோ சீக்கிரம் கொடுத்துட்டு ஓடிவர்ரா.. இதுலயே தெரியுது இவ எவ்ளோ சைட் அடிச்சிருப்பா நம்மளனு.. ஸோ இப்போ நம்ம turn.. நாம தான் கெத்து காட்டனும்.. )

என்ன..?

அத குடுங்க..

எத??

நீங்க கைல வச்சிருக்கது என் போட்டோ.. நீங்க என்ன தான் வரஞ்சீங்க.. கொடுங்க..

ஹே.. யார் நீ ?? உன்ன இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல..

ஓ.. அப்போ இவ்ளோ நேரம் என் முன்னாடி உக்காந்து என்ன சைட் அடிச்சது யாராம்..??!!

(நான் சைட் அடிச்சேனு தெரிஞ்சும் எவ்லோ சீன் போட்டுருக்க.. இரு உன்ன சும்மா விடகூடாது)

என் கைல இருந்த படத்தை விரித்து அவள் முன்னாடி நீட்டினேன்.. இங்க பார் இதுல இருக்க பெண் நீ இல்ல.. இவ எவ்ளோ அழகா இருக்கா நீ உன் மூஞ்ச்ச கண்ணாடில பாத்துருக்கியா இல்லயா..??

சட்டென்று கோபம் வந்தது போல் என் கையில் இந்த படத்தை பிடிங்கிகொண்டு நடக்க ஆரம்பித்ததாள்..

ஹேய்… ஜாஸ்மின்…

நடந்துகொண்டே ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள்..

ஹேய்ய்… நில்லு..


போடா.. என சொல்லிவிட்டு சிரித்துகொண்டே ஓடி மறைந்தாள்..
அவள் பேச்சிலும் அவள் நடையிலும் ஒரு மழலை குறும்புதனம் தெரிந்தது..

அவள் அருகில் வந்த அந்த ஒரு நொடி.. துப்பட்டா மேலே ஊஞ்சல் ஆடிய ஐடி கார்டில் ஜாஸ்மின் என இருந்தது.. அவள் வராண்டாவை தாண்டி தூரம் போகும் வரை “ஜாஸ்மின்” வாசனை என்னை சுற்றிகொண்டேயிருந்தது..

எழுதியவர் : மதுகை தி பாரதி (17-May-22, 4:16 pm)
பார்வை : 294

மேலே