உன்னை கண்ட நாள் முதல் 555

***உன்னை கண்ட நாள் முதல் 555 ***


ப்ரியசகியே...


நம் முதல் சந்திப்பில் உன்னிடம்
உள்ளம் கொடுத்து ஏங்கினேன்...

மழலை போல உன்னை
காலமெல்லம் பார்த்து கொள்ள ஆசை...

என் வாழ்வின்
இறுதி நாளிலும்...

உன் அன்பில்
கரைந்திடவே ஆசை...

நாம்
சந்திக்கும் நாட்களில்...

உன் இதழ்களின்
ரேகைகளை கண்டால்...
தேன்பருக
சை தோன்றும்...

எதிர் எதிரே அமர்ந்து
பேசும் நேரங்களில்...

சில நிமிடம் உன் மடியி
ல்
லைசாய்க்க தோன்றும்...

உன் அழகு
சிரிப்பில் விழும்...

கன்னத்தின் மடிப்பை
கிள்ளிவிடவும் தோணும்...

இன்று
எல்லாம் மாறிவிட்டது...

நீ கோபம் கொண்டு மௌனமாய்
இருக்கு
ம் இந்த நாட்களில்...

உன் கோபம்
தனியும் நாள்வரை...

உன் நினைவுகளோடு
பேசிபேசி மகிழ்கிறேன்...


நாளை நீ தேடி
வரும் நாளுக்காகவும்...

உன் கைபேசி
அழைப்புகளுக்காகவும்...

காத்திருக்கிறேன் நான்.....


***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (17-May-22, 4:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 258

மேலே