குளிர்ந்து போகுதடி

உன் விழியில் ஆடும் பாப்பாவாய்
என் இதயம் ஆடித் தொலையுதடி...
உன் மொழியில் இனிக்கும் தேன்பாவால்
என் கவிதை நிறைந்து வழியுதடி.....
உன் கொலுசில் ஒலிக்கும் ஜதிபோல
என் நடையும் நாட்டியம் ஆடுதடி.....
உன் அணைப்பில் கிடைக்கும் வெதுவெதுப்பில்
என் ஆவியும் குளிர்ந்து போகுதடி.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-May-22, 7:56 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kulirnthu pokuthadi
பார்வை : 123

மேலே