காதல் இதயம் நீ கவிதை வரிகள் நான் ❤️💕

இரவுக்கு நிலவு வேண்டும்

என் இதயத்திற்கு நீ வேண்டும்

உன் கால் அடி தடயம் கண்ணுக்கு

தெரியவேண்டும்

என் கவிதை பூக்கள் மலர வேண்டும்

உன்னிடம் மனம் விட்டு பேச

வேண்டும்

என் நெஞ்சம் எல்லாம் பல

வண்ணம்மாக மாற வேண்டும்

நீயும் நானும் ஒன்றாக

வாழவேண்டும்

இந்த பூமியே நாம் காதலை ரசிக்க

வேண்டும்

உன் புன்னகையை சேமிக்க

வேண்டும்

காலம் எல்லாம் உன்னை நான்

நேசிக்க வேண்டும்

எழுதியவர் : தாரா (18-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 167

மேலே