உள்ளம் அழலாமோ

கண்களி னாலே அம்பெறி யாதே
கண்டது மேநீ யருகேவா
பெண்களி லாதே அன்பது மேதோ
பண்புட னேதே னிலவேவா
*
அந்தியி லேவா அன்பினை யேதா
அம்புலி யாளே அமுதேதா
சிந்தையி லேநீ வந்தித ழோடே
சிந்திடு வாயே அதையேதா
*
சந்தத மேநா மன்புற வாடா
துன்புற லேதா னழகாமோ
கன்றறி யாதே நின்றிடு மாடா?
கண்டறி வாயே எழிலாளே!
*
தொந்தர வேதா னென்றுனை நீயே
தந்திட வாரா ததனாலே
சொந்தமு மேதோ பந்தமு மேதோ
வென்றுள மேதா னழுவாதோ?
*
வண்ணப்பா

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-May-22, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 196

மேலே