மணப்பாகு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பித்த வருசிகெடும் பேசிலற்ப வாதமறுந்
தத்தனலும் மெள்ளவுள்ளே தாவிவரும் - மெத்த
வணப்பாகை யொத்தமொழி மாதே முறுகா
மணப்பாகுக் கென்றே மதி

- பதார்த்த குண சிந்தாமணி

பயித்தியம், அருசி, சிலேற்பனம் வாதம் இவை மணப்பாகுண்பதால் நீங்கும். உடலில் சூடுண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-22, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே