தம்படிக்கு தின்ன பஜ்ஜி

நேரிசை ஆசிரியப்பா


தம்படிக் கோரபஜ்ஜி வாங்கித் தின்றேன்
அம்மட் டில்நில்லா காலணா அரையனா
ஓர்அனா வரைநான் கண்டேன் இன்றோர்
பஜ்ஜி ரூபாய் ஐந்தும் மாறி
ஆறாய் ஏறி விற்கும் நிலையை
இன்று கண்டேன் உண்மை
தின்கிறார் அதையும் வாங்கி நன்றெனவே


பிரம்புக் கூடை யொன்றை தந்து
விரைந்து சென்று கிச்சிலி அரிசி
வாங்கி வாவென் றைந்து ரூபாய்
தந்தெனை அனுப்புவ ளெனது அன்னை
எலிபொத் தல்போட்ட கூடையு டனைந்து
ரூவா வைகடை முதலாளி யிடந்தர
வாங்கி பொத்தலை உருட்டிய காகிதம்
வைத்த டைத்து பத்து பெரிய
படியில கோபுர மெனவளந் துகொட்டி
எனது சட்டை பாக்கெட் டில்உலர்
திராட்சை பொட்டனம் தின்னத்
தந்து ஜாக்கிரதை போய்வா என்பானே


நேரிசை வெண்பா

இன்று பெரியபடி இல்லை கொசுறுதர
தின்னும் விடலைகள் இல்லையே -- சொன்னால்
கதவ்ருகே த்ந்துகிலோ பத்தாறு ரூபாய்
பதறாது தாவென்பன் பாரு

பத்தாறு. == அறுபது
படிக்கு எட்டு ஆழாக்கு
கிலோவுக்கு ஐந்து ஆழாக்கு
விலைவாசி எப்படி ஏற்றமாகி உள்ளது பாருங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (19-May-22, 12:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 26

மேலே