காதலின்றி வேறில்லை

💙💜💙💜💙💜💙💜💙💜💙

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💙💙💜💙💜💙💜💙💜💙💜

சொக்குதே
மனம் சொக்குதே !
உந்தன்
சுடர்விழி அழகினிலே !

திக்குதே
வாய் திக்குதே !
உந்தன் செவ்விதழ்
அழகினிலே .....!

தவிக்கிறேன்
சிக்கித் தவிக்கிறேன்
உந்தன்
கூந்தல் அழகினிலே ....!

மறக்கிறேன்
பசி மறக்கிறேன்
உந்தன்
கன்னத்தின் அழகினிலே...!

கிடக்கிறேன்
மெய்மறந்து கிடக்கிறேன்
உன் மேனி அழகினிலே .....!

நடக்கிறேன்
தடுமாறி நடக்கிறேன்
உந்தன்
கால் அழகினிலே.....!

இருக்கிறேன்
மௌனமாக இருக்கிறேன்
உந்தன் குரல் அழகினிலே....!

விழுகிறேன்
மயங்கி விழுகிறேன்
உந்தன்
விரல் அழகினிலே.....!

சிலிர்க்கிறேன்
தேகம் சிலிர்க்கிறேன்
சிரிப்பு அழகினிலே.....!

உடைகிறேன்
சுக்குநூறாய் உடைகிறேன்
உந்தன்
ஆடை அழகினிலே ....!

உறைகிறேன்
பனியாய் உறைகிறேன்
உந்தன்
பார்வை அழகினிலே....!

பிழைக்கிறேன்
செத்துப் பிழைக்கிறேன்
உந்தன்
மொத்த அழகினிலே.....!

*கவிதை ரசிகன் குமரேசன்*

💙💜💙💜💙💜💙💜💙💜💙

எழுதியவர் : கவிதை ரசிகன் (19-May-22, 9:30 pm)
பார்வை : 46

மேலே