மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை அறிந்தொருவன் வாழுமேல் இல்லை – அறநெறிச்சாரம் 114

நேரிசை வெண்பா

மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை - செறிந்தொருவன்
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
கூற்றம் இடைகொடுத்த நாள் 114

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒருவன் தனது ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கையில் ஆன்மவடிவை அறிந்து இவன் வாழ்கின்றானா என்றால் இல்லையாகும்;

ஒருவன் மிகவும் பற்றைவிட்டு ஞானத்தையடையவில்லை என்றால் அவன் கூற்றினிடம் அகப்படும் நாளில் அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.

குறிப்பு:

அழியுந் தன்மைத்தாய உடம்பு உள்ள பொழுதே அழிவல்லாத ஞானத்தை முயற்சியால் அடைய வேண்டுமென்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-22, 9:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே