கைகூப்பி வணங்கின பெண்

பெண் பார்க்கப் போன வீட்டில் பெண்ணை அழைத்து வந்தார்கள். பெண் வரும்போதே மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து கைகூப்பி "வணக்கம்" என்று சொல்கிறார்.
@@@@@@@@@
தங்கள் இல்லம் சென்றபின்பு மாப்பிள்ளை வீட்டில்:
ஏன்டா கம்பிளியேஷ் நாம் பார்த்துட்டு வந்த பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கு தா? நல்ல மரியாதை தெரிஞ்ச குடும்பம்டா.

நாம் அவுங்க வீட்டு வாசலுக்குப் போனதும் பெண் வீட்டார் அனைவரும் வாசல்ல வரிசையா நின்று கைகூப்பி 'வணக்கம்' சொன்னாங்களே.

அதைவிட என்னடா வேணும்? இந்தக் காலத்தில் இவ்வளவு மரியாதை தெரிஞ்ச குடும்பத்தை நான் எங்கேயும் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதும் இல்லை.

பொண்ணும் ரொம்ப அழகா இருக்கிறா. நல்ல படிப்பு. வேலைல இருக்கிற பொண்ணு. உனக்கும் வயசு இருபத்தியெட்டு ஆகுது.

பொண்ணுக்கு வயசு இருபத்தைந்து தான் ஆகுது. என்னடா சொல்லற கம்பிளி.

@@@@@@@
மரியாதை கெட்ட இந்தக் காலத்தில் கைகூப்பி வணக்கம் சொல்லறவங்கள கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்கணும்.

அந்தப் பொண்ணு தலையை குனிஞ்சிட்டு கூச்சத்தோட வராம வாக்குக் கேக்கற அரசியல்வாதி மாதிரி கைகூப்பிட்டு 'வணக்கம்' நிமிர்ந்த தலையோடு வருது.
வருங்காலத்தில் அரசியலில் நொழஞ்சு ஒரு வட்டத் தலைவி ஆனாக்கூட நான் அந்தப் பொண்ணுக்கு எடுபிடி ஆகிடுவேன். எனக்கு அந்தப் பொண்ணு வேண்டவே வேண்டாம்.‌

எழுதியவர் : மலர் (21-May-22, 6:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 97

மேலே