முழி குட்டி…

சிங்கப்பூரில் 9 கல் சர்க்கில் மாகாணத்தில் கெப்பல் லாஜிஸ்டிக் கம்பெனியில் வழக்கமாக தொடங்கியது ஒரு கப் காப்பியுடன் அந்த விடியர்காலை..

சூடா மக்கான்..? ஹரி கேட்டான்…

அவனோட தாய் மொழி தமிழ் தான்.. என்ன பன்றது மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன்.. மலேசிய வாடை வந்து போகத்தான் செய்கிறது.. சம் டைம் கனினா.. சீ பாய்’னு.., சைனீஸ் தாய்லாந்து மொழிகளிலும் திட்டுவான்.. (அப்டினா என்ன அர்த்தம்னு தேடி பார்க்காதீங்க.. கெட்ட வார்த்தைகள்)

சாப்டேன்.. நீ…??

இதோ.. சாப்ட போறேன்.. நிக்கோடின் ஒடச்சி தாறேன் வேணுமானு மலேசிய சிகரெட் ஒன்ன நீட்ட்டுனான்..

சிரிச்சிகிட்டே வேணாம்னு தலைய ஆட்டிட்டு தஞ்சாவூரில் இருந்து வாசு அனுப்பிய குருஞ்செய்திக்குள் தலையை நுளைத்தேன்.. என் உதட்டோரம் சிறு புன்னகை..

என்ன கூட்டாளி.. சரக்கு கால் பன்னுச்சா.. இல்ல கிஸ் பன்னுச்சா..
ஏன் இவ்லோ சந்தோசமா இருக்க..?

(சிங்கப்பூர், மலேசியாவில் பெண்கள சரக்குனு சொல்றது தான் வழக்கம்.. இதற்க்கு கோவபடவும் முடியாது..)

அவன் சரக்கு என்று சொன்னவுடன் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.. கவிதையோடு சில நினைவுகளும்.. ஒரு நொடி கண்முன்னே வந்து போனது..

தஞ்சாவூர்.. அன்னை வேளாங்கன்னி கலை கல்லூரி.. கல்லூரியில் சேர்ந்து 3 வது நாள்..
மொழி பாடத்திற்கு மட்டும் மூணு வகுப்புகள் சேர்த்து ஒரே வகுப்பறையில் நடந்துகொண்டிருந்தது.,

நம்ம கேங்க் எப்பயுமே லாஸ்ட் பெஞ்ச் தானே..
பள்ளி கூடத்துல இருந்தே அப்டி பழக்க பட்டது.. மாறுமா என்ன..?!

ஒரு பக்கம் தமிழ் அம்மா உயிர கொடுத்து கத்திகிட்டு இருந்தா..

நான், உதயபிரகாஷ், வாசு, ஜாண், தாமோதரன் திராவிடசிங்கம் நாங்க ஆறுபேரும் ஒவ்வொரு பொண்னா பார்த்து மார்க் போட்டுகிட்டு இருந்தோம்..

முப்பது நாப்பது பொண்னுங்கள்ல நாலு அஞ்சி தான் பத்துக்கு, ஒன்பது மார்க்…
அந்த நாலு அஞ்சில சூர்யாவும் ஒருத்தி…

நான் மட்டுமே மார்க் போட்டுருந்தா பத்துக்கு பத்தே போட்டுருப்பேன்.. இது ஆறு பேரு கொண்ட ஒரு குழு.. அதனால பொய்யா மார்க் போட முடியாது..

சூர்யாவுக்கு ஏன் 9 மார்க்.. அப்டி என்ன அவகிட்ட இருக்கு…
அந்த ஒரு மார்க் குறைய அப்டி என்ன அவகிட்ட இல்ல..??!!

அவ கண்ணுக்கு முதல் மார்க் மீதம் இருக்க 9 மார்க்கும் அதுக்கே கொடுக்கலாம்.., சரியான முட்டமுழி…

அப்ரம் அவளோட ஹோம்லி லுக்.. எல்லோரையும் கவற கூடிய விதத்துல செம்மயா இருப்பா..

மனிகட்டு வரை தழுவியிருக்கும் மஞ்சள் நிற முழுக்கை சுடிதார்., அதே நிறத்தில் பாதி மலர்ந்த ரோஜா பூ ஒன்று..

ரெண்டு புருவத்திர்க்கும் நடுவில் நகம் அளவிலான பொட்டு.. காதுல சின்னதா தங்க கம்மல்.. மார்கழி மாசத்துல அருகம் புள் மேல ஒரு சொட்டு பனித்துளி பார்த்து இருகீங்களா.. அப்டி வலது பக்க மூக்கின் மேல் ஒற்றை கல் மூக்குத்தி.. கருப்பு கலர் கடிகாரம்.. 2 வளையல்.. 50 கிலோ எடை..
உயரம்….ம்ம்ம்ம்ம்…????

தமிழ் அம்மா ஏதோ கேட்க எழுந்து பதில் சொன்னாள்.. உயரம் அளவெடுக்கப்ப்டது.. காலில் 3 இஞ்ச் உயரம் கொண்ட செருப்போடு சேர்த்து 5 அடி இருந்தா..

சுடிதார் போட்டுருந்ததால சில வளைவுகள் கனிப்பது கடினமாகவே இருந்தது., இருதாலும் கடைசி பெஞ்ச்ல இருந்த என்னால் 100 மார்க் அள்ளி கொடுக்க சில த(ப)குதியும் அவ கிட்ட இருந்தது..

அந்த ஒரு மார்க் ஏன் குறஞ்சதுனு இப்ப வரைக்கும் எங்க 6 பேருக்கு மட்டும் தான் தெரியும்.. அது ரகசியம்.. அத சொன்னா அவ “மனசு காயப்படும்”..

மச்சி நல்லா மாட்டிகிட்டோம்.. சிங்கம் கத்தினான்.

ஏன் டா..

அங்க பாரு.. “ஜந்து” டிபன் பாக்ஸ் ஓபன் பன்னி பாக்குறா.. சூர்யாவோட தோழிக்கு நாங்க வச்ச பேரு.. ஜந்து..
அவ சாப்பாட காலையிலேயே நாங்க ஆட்டய போட்டு சாப்பிட்டுட்டோம்..

டிபன் பாக்ஸ் மூடி வைக்கும் போது இவனுங்க திருந்தவே மாட்டானுங்கடினு ஒரு முனுங்கள் சத்தம்.. கடைசி பெஞ்ச் வரை கேட்டது.

மச்சி.. உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன்.. இனிமேல் நீங்க யார் சாப்பாட வேணும்னாலும் எடுக்கலாம் சாப்டலாம்.. பட்
சூர்யா சாப்பாட யாரும் எடுக்க கூடாது. இது என்னோட ரூல்..

ஓ.. மச்சி கதை அப்டி போகுதா..

எப்டி..???!

ஓஹோ…. ஓஓஓஓஒஹோஹோஹோ…எல்லோரும் ஒரே மாதிரி கூவ ஆரம்பிச்சானுங்க..

பிடிக்கும் அவ்ளோதான்.. நீங்க நினைகிற மாதிரிலாம் இல்ல..

மச்சி நல்ல தாண்டா இருக்கா.. பேசாம லவ் பன்னிடு.. உதயா சொன்னான்..

டேய்ய்.. சும்மா இர்ர்ராரரா… நீ ஒரு பீருக்கு ஆச பட்டு என் வாழ்கைல சடுகுடு ஆடிடாத.. நீ நினைகிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல.. அவ அழகா இருக்கா அவ்ளோ தான்..

கொஞ்ச நாள்.. பார்த்தோம்.. சிரித்தோம்.. முறைத்தோம்.. பேசவும் ஆரம்பித்தோம்..

ஒரு நாள் அவளும் அவளது தோழியான எஸ்தர்பிரியதர்ஷ்னி மற்றும் ஜந்து இந்த மூண்று பேரும் என் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்..

ஹேய்.. handsome.. எஸ்தர் கூப்பிட்டாள்..

திரும்பி பார்த்தேன்..

ஹேய்.. இங்க பாருடி திரும்பி பாக்குறான்.. என சொல்லிவிட்டு சிரித்தார்கள்..

ஹல்லோ.. என்ன உன் மனசுல என்ன handsome’னு நெனப்போ…??

மீண்டும் சிரிதார்கள்..

நான் முறைத்தபடி திரும்பி சூர்யாவ பார்த்தேன்.. அவ பார்வையில் ஏதோ…ஏதோ…. அப்டி ஒரு ஈர்ப்பு.. புவி ஈர்ப்பு விசை போல் இது விழி ஈர்ப்பு விசை…

அவள் போன் நம்பர் கிடைத்தால் நல்ல இருக்குமே யார்ட கேக்குறது..???

ப்ரியா.. ஐ.டி டிபார்ட்மெண்ட்.. கல்லூரி முதல் நாளே என்னிடம் காதலை வெளிபடுத்தி என்னாள் புறக்கணிக்கப்பட்டவள்.. அதே நேரத்தில் நட்பாய் பழகும் ஒரு லூசு தோழி..

அவளிடம் கேட்டேன்.. ப்ரியா.. எனக்கு ஒரு ஹெல்ப்..

என்ன டா..??

எனக்கு சூர்யா போன் நம்பர் வேணும்.

நெனச்சேன் டா.. என்னால முடியாது..

ப்ரியா ப்ரியா ப்ரியா.. ப்லீஸ்..

டேய்ய்.. அப்டி அவ கிட்ட என்ன தான் டா இருக்கு.. எல்லோரும் அவ பின்னாடியே சுத்துரீங்க.. என் க்லாஸ்ல ரெண்டு பேர் அவள லவ் பன்றானுங்க..

இன்னும் எத்தன பேர் லவ் பன்றானுங்கனு வேற தெரியல.. அப்டி என் ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்குனு லவ் பன்ற..

ஹேய்ய்.. நான் எப்போ லவ் பன்றேனு சொன்னேன்.. அவ கிட்ட பேசானும் போல இருக்கு அவ்ளோ தான்.. இப்போ வாங்கி தர முடியுமா முடியாதாடி..??

முடியாது டா..
தைரியமான ஆளா இருந்தா நீயே கேட்டு வாங்கிகோ.,
அப்டி நீ வாங்கிட்டா நீ சொல்றத நான் கேக்குறேன்.. இபோ உன் பேச்ச என்னால கேக்க முடியாது போடா… சொல்லிவிட்டு நகர்ந்தாள்..


என்னையா இன்சல்ட் பன்ற… இன்னைக்கே வாங்கி காட்டுறேன் டி…
(ஒரு சூராவளி கிளம்பியதே.. மனசுக்குள் மிர்ச்சி சிவா நடனமாடிகொண்டிருதான்..)


மதிய உணவு இடைவேளை முடிந்து கல்லூரி வராண்டாவில் நடந்து வருவாள்..

என் திட்டபடியே எதிரே போனேன்.. சூர்யா ஒன் மினிட்..

என்ன சொல்லு.. பேசிகொண்டே நடந்தாள்..

உன் ஐ டி கார்ட் கொடு..

ஏன்…??!??

ஒரு நிமிசம் நில்லு.. அவள் சுண்டுவிரல் பிடித்தேன்..

ஹே.. என்ன..?

ஐ டி கார்ட் எடுத்து வர மறந்துட்டேன்.. இப்போ லேப். குமார் சார் ஐ டி இல்லாம உள்ளவிட மாட்டாரு..

அதுக்கு.,? என் ஐடி எப்டி..??

ஜஸ்ட் அந்த ரோப் பார்தாலே உள்ள விட்டுருவாரு.. நெக்ஸ்ட் பீரியர்ட்ல உன்கிட்ட தாறேன்..

எதுவும் பேசாமல் கைழுத்தில் இருந்து கிளட்டி என் கையில் தினித்துவிட்டு நடந்தாள்..

சூர்யா மனோகரன்.
பி.எஸ்.சி கம்யூட்டர் சைன்ஸ்.
முதல் நிலை
போன்: xxxxxxxxxx அனைத்தும் 5 நிமிடத்தில் மனதில் பதிவேற்றப்பட்டது..

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளிடம் ஐடி கார்ட் கொடுத்தேன்..
குழப்பமாக பார்த்தாள்..
சிரித்துகொண்டே நகர்ந்தேன்..

அன்று இரவு ப்ரியாவுக்கு கால் பன்னேன்.. ப்ரியா.. நான் சூர்யா கிட்ட பேசனும் நான் போன் பன்றேன் அவங்க அப்பா எடுத்தா நீ பேசிடு சூர்யா எடுத்தா நான் பேசிகிறேன்..

அட பாவி நம்பர் வாங்கிட்டியா..?? எப்டி டா..??!

அதான் பார_தீ…

ப்ரியா லைனில் காத்திருக்க சூர்யாவிற்க்கு கால் பன்னேன்..

ஹல்லோ….

ஹே.. சூர்யா நான் ப்ரியா பேசுறேன்…

ஹே..சொல்லு டி…

அட போதும் டி… ப்ரியா கால் துண்டிக்க பட்டது.

ஹே.. நான் பாரதி பேசுறேன்..

ம்ம்ம்.. சொல்லு டி..

ஏய்ய்ய்… நான் ப்ரியா இல்ல.. பாரதி பேசுறேன்..

தெரியும் டி.. சொல்லு டி…

ஓ… அந்த டி யா… ஒன்னும் இல்ல டா சூர்யா உன் கிட்ட பேசனும் போல இருந்தது. அதான்..

ஓ.. சூப்பர் டி பாரதி.. இதுக்கு தான் காலையில ஐ டி கார்ட் வாங்குனியா டி..??!!

ஆமாம் டா சூர்யா..

சரி டி.. நாளைக்கு சீக்கிரம் வாடி.. உன் கிட்ட கொஞ்சம் பேசனும்..

ம்ம்ம்.. ஓகே டா..

(அவளுக்கு பாரதி என்பது பெண்னின் பெயராகவும் எனக்கு சூர்யா என்பது ஆணின் பெயராகவும் இருந்தது வீட்டில் சந்தேகம் வராமல் பார்த்துகொண்டது)

ஒரே வாரத்தில் இருவரும் காதலர்களானோம்..

அதிகமாக அன்பு பரிசுகளும் எப்போதாவது முத்தங்களும் பரிமாறிக் கொண்டோம்..
முத்தங்கள் சில நேரங்களில்
அவள் கண்களில்.. சில நேரங்கள் அவள் கழுத்தில்.. சில நேரங்கள் அவள் உதட்டில்.. எங்களுடைய அதிகபடியான காமம் என்பது முத்தத்தின் சத்தங்களே.. அதை தாண்டி வேறொன்றுமில்லை..

எங்கள் காதல் கல்லூரியில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எங்க 6 பேர் கொண்ட குழுவும் அறிந்ததே..

ஒரு நாள் :-
வாசு, ஜான் எங்க இருக்கான்.. அவன இன்னைகு மதியம் வெளில வர சொல்லு.. சரக்கு அடிக்கலாம்..

சரக்கு என்றால் முதல் ஆள் வாசு ஆனால் அவனுக்கு முன்னால் உதயா நிற்பான்.. ஜானும் வந்து சேர்ந்த்தான்.. வழக்கமான ஒயின் ஷாப் தான்..

அண்னே… 4 பீர் கூலிங்கா…
ரெண்டு கிங்ஸ் (வாசுவுக்கும் உதயாவிற்க்கும்..)

முதல் ரவுண்ட்.. கலகலப்பாகவே போனது.

அண்னே… இன்னும் 4 பீர்..

எத்தன சரக்கு அடிச்சாலும் போதையே ஏற மாட்டேங்குது டா.. உதயாவின் குமுறல்..

இதென்னடா சரக்கு என் ஆளு கண்ணுக்கு முன்னால.. (ஆரம்பத்தில் ஒரு கவிதை நினைவிற்கு வருது சொன்னேன்’ல அதான் இது)

பேசாம போயிடு காலி பாட்டில் எடுத்து தலைல அடிச்சிட போறேன்.. உதயாவின் கோவம் எப்போதும் சிரிப்பூட்டவே செய்யும்..

மச்சி நான் ஒண்ணு சொல்வேன் கோச்சிக்க மாட்டல்ல… ஜான் கேட்டான்.

சொல்லு மச்சான்..

சூர்யா உனக்கு வேணாம் மச்சி..

டேய்ய்ய்… சும்மா இர்ர்ர்ரா… வாசு இடைமறித்தான்.

மச்சி நீ சொல்லு.. ஏன் இப்டி சொன்ன..?!

சூர்யா சங்கித்த லவ் பன்றா…

சங்கித் சூர்யாவ லவ் பன்றது எனக்கு தெரியும்.. பட் சூர்யா லவ் பன்னமாட்டா..

இல்ல மச்சி.. சூர்யா நைட் சங்கித் கிட்ட பேசிகிட்டு இந்தா. எங்க எல்லொருக்கும் தெரியும்..

நார்மலா கூட பேசிருக்கலாமே மச்சான்..

இல்ல மச்சான்.. ரெண்டு பேருமே லவ் பன்றாங்க..

ஓ… கொஞ்ச நாளாவே என் கிட்ட சரியா பேசல மச்சான்.. எப்போ பார்த்தாலும் புரிஞ்சிக்க பாரதி புரிஞ்சிக்க பாரதினு சொன்னா ஒருவேள பிரிஞ்சி போ பாரதினு சொல்றத்துக்கு பயந்து.., புரிஞ்ச்சிகோ பாரதினு சொல்லிருப்பாளோ..
மனசு வலிக்க மச்சான்.. முழு பீரையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்..

மச்சி கிளம்பு..

எங்க..?? ஜான் வியப்பாக கேட்டான்.

சொல்றேன் கிளம்பு..

நேராக சங்கித் இருக்கும் வகுப்பறையை தேடி போனோம்..
அங்கு சங்கித் இல்ல.. சூர்யா இருந்தா..

உன்னிடம் பேச ஒன்னும் இல்ல என்பது போல் பார்த்துவிட்டு.. சங்கித்தை தேடினோம்..

ஒரு வழியாய் படிகட்டில் வழிமறித்தோம்..

என்னை பார்த்ததும் சொல்லு மாப்ள என்றான்..

மாபள இல்ல சகலபாடி.. சிங்கம் என் அருகில் நின்று கமெண்ட் செய்தான்..

ஒன்னும் இல்ல.. சூர்யாவ லவ் பன்னுறியா??

ஆமா மாப்ள..

சூர்யா..??

அவளும் தான்..

இங்க பார் மச்சான் நீயும் லவ் பன்னுன அவளும் உன்ன லவ் பன்னானு எல்லொருக்கும் தெரியும்.. என்ன பன்றது காதல் எப்போ யார் மேல வரும்னு யாருக்கு தெரியும்.. இதுல யாரையும் குறை சொல்ல முடியாது.. எது நடக்கனுமோ அது தான் நடக்கும் விடு மச்சான்.. இதுக்கு போய் இவன அடிக்க வர்ர… என் கோவம் உணர்ந்த சங்கித்தின் உயிர் நண்பன் மணி என்னை திசை திருப்பினான்..

ஆமாம் மணி சொன்னது சரி தானே..

காதல் எங்கே எப்போ யார் மேல வரும்னு யாருக்கு தெரியும்..
நான் பார்த்த விதம் அவளை ரசித்த விதம்.. அவளது அசைவுகள் ஒவ்வொன்றிற்க்கும் கவிதை எழுதிய என் கைகள்.. என் கவிதைகளை கிறுக்கள்கள் ஆக்கிய அவள் விழி.. முழிகுட்டி எனும் அவளது செல்லப்பெயர்..

இவை அனைத்தையும் நான் மட்டும் தான் ரசிக்க வேண்டுமா…?? அப்படி நினைத்தால் நான் சுயநலவாதி தானே.. ஏன் என்னை போன்று அவனும் ரசித்து இருக்கலாம்.. அவனை அவளும் ரசித்து இருக்கலாமே.. நான் லாஸ்ட் பென்ஞ்ச்ல உக்காந்து ரசித்தேன்.. அவன் எனக்கு முன் வரிசையில் அமர்ந்து ரசித்திருப்பான்.. அவனும் கவிதை எழுதியிருப்பான்.. காதல் எல்லாவற்றிற்கும் பொதுவானது.. நீ என்னை காதலிக்க வேண்டும் என்பது சட்டம் கிடையாது.. யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்..
காதலும் கடந்து போகும்…


மைக்.. என் வாட்ச் சீலாப்பா ஓடுதுன்னு நினைகிறேன்.. டைம் என்ன..??

ஹலோ.. பாரதி.. ஹலோ..

ஓ.. சாரி.. என்ன ஹரி கேட்ட??

மணி என்னனு கேட்டேன்..

8:30

சரி நான் மேல போறேன்.. பாஸ் வர்ரத்துகுள்ள மேல வா… ஹரி சொல்லிட்டு கிளம்பினான்..

ம்ம்ம்.. வர்ரேன் போ..

மீண்டும் ஒருமுறை
வாசு அனுப்பிய குருஞ்செய்தியை படிக்க ஆரம்பிதேன்..

“மச்சி சூர்யா கல்யாணம் இனிதே முடிந்தது… மாப்ள பேரு நாகேந்திரன்.. சரி நீ எதும் பீல் பன்னாத.. ஒர்க் பாரு.. ஃப்ரியா இருக்கும் போது பேசு..”

காதல் பொதுவானது.. சில நேரங்களில் கண்ணீரும் பொதுவானது..
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்.. அதனால் ஹரிக்கு முன்னால் சிரித்தேன்.. தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.. அதனால் அழுகிறேன்..

இந்த தனிமையில் என் ஒரு துளி கண்ணீர் உனக்காக முழிகுட்டி.

எழுதியவர் : மதுகை தி பாரதி (22-May-22, 2:19 am)
பார்வை : 268

மேலே