பெரிய மனிதர்கள்

பறவைகள் வாழும் கூட்டை
கலைத்தால் பாவமென்று
ஊருக்கு அறிவுரை சொல்லும்
சமுதாயத்தின்
"பெரிய மனிதர்கள்"....!!

ஆணும் பெண்ணும்
அன்பால் கட்டிக்கொண்ட
காதல் கூட்டை பிரிப்பது
பாவமென்று தெரிந்தே
ஜாதியென்றும்
அந்தஸ்துயென்றும் கூறி
பிரித்து விடுகிறார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-May-22, 12:28 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : periya manithargal
பார்வை : 125

மேலே