யாரறிவார்

நிலம் , நீர் , காற்று
நெருப்பு , வானம்
இவை அனைத்தையும்
ஆதியில் இயற்கையென
அழைத்தார்கள்.
இயற்கை பற்றி எதுவும்
அறியாத அன்றைய மக்கள்
அதனை ஏற்றார்கள்.

காலங்கள் பல கடந்தன
பிற்காலத்தில் தோன்றிய
விஞ்சானமோ
இயற்கைக்கு இறைவனென
பெயர் சூட்டி மகிழ்ந்தது,
அப்போது தோன்றிய
புராணங்களும் அதனை
பெருமையோடு
ஏற்றுக் கொண்டன

இப்பொழுது தான் புரிகிறது
இறப்புக்கும், பிறப்புக்கும்
பொறுப்பேற்பவன்
இறைவன் என்பதால்
வெய்யிலின் கொடுமையாலும்
நீரின் பெரு வெள்ளத்தாலும்
இன்று மக்களைக் கொன்று
அழிக்கிறானோ இறைவன்

இல்லை
விஞ்சானம் இயற்கைக்கு
இறைவனென பெயர் சூட்டியது
மக்கள் படும் அவதிகளுக்கு
மருத்துவ வசதிகளும்’
மருந்து, மாத்திரை களும்
கொடுத்துதவ முடியும்
என்ற நல்லெண்ணமோ !
யாரறிவார் ?

எழுதியவர் : கோ. கணபதி. (23-May-22, 5:00 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : yaararivaar
பார்வை : 39

மேலே