வேளைப் பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கணமாந்தம் வாதங் கபக்கோவை கோழை
அணுமாந்த வெப்பும் அகலும் - மணமாரும்
பாளைக் குழலே! பசிமெத்த உண்டாகும்
வேளைப்பூ என்றொருக்கால் விள்

- பதார்த்த குண சிந்தாமணி

மாந்தம், கணம், வாதம், நீரேற்றம், மார்புச்சளி, மாந்தசுரம், இவற்றை நீக்கி பசியையுண்டாக்கும் பண்பு வேளைப் பூவிற்கு உண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-22, 7:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே