உண்மைகள் 4

அழியும் மண்ணுலகம் விட்டு
அழியா விண்ணுலகம் அடையும்
வரை தான் மனித வாழ்க்கை

மரணம் ஆராதனைக்குரியது
மரணம் இல்லையேல்
உலகே ரணமாகி நரகமாகும்

கோபம், துரோகம்
பொறாமை, பேராசை
நிம்மதியை கெடுத்துவிடும்

அன்பை மறந்து, அறத்தைத் துறந்து
பாவம் செய்து, பழி வாங்க
எந்த மதமும் போதிக்கவில்லை

கதிரவன் கருக்கலில் எழுந்து
கிழக்கின் அழுக்கை போக்குகிறான்
மக்கள் உழைத்து உயிர் வாழ

கருவறையில் இடம் தந்து
காத்திட்ட அன்னையின்
கடைசி காலம் அன்னையர் இல்லம்

வாக்கு விலை போகிறது
ஒருவரை உயரத்தில் அமர்த்த
உயர்த்தியவர்களை ஆண்டியாக்க

மேனி நடுங்கும்போது
தடுமாறும் சொற்கள்
தவணை முறையில் உதிரும்

விண்ணில் நீ , மண்ணில் நான்
விளையாட ஏங்குதே மனம்
வாராயோ !

எழுதியவர் : கோ. கணபதி. (25-May-22, 3:08 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 30

மேலே