அவளும் நிலவும்

நதியில் ஓர் தடாகம் அது
தாமரைப்பூத்த தடாகம் அந்த
வேளை மனம் மயக்கும்
இனிய பின்மாலை மல்லிகை வாசம்
தாங்கி வந்த தென்றல் என்னைத்
தொட்டதோ என்று நினைத்தேன் பின்னே
திரும்பி பார்த்தேன் என்பின்னே என்னவள்

சித்திரை நிலவு இப்போது வான
வீதியில் வலம் வந்தது வந்து
நின்றது தடாகத்தின் மேலே கொஞ்சம்
தன் தண்ணொளியால் குமுத மொட்டுகளைத்
இச்சைகொண்டு தடவிட மொட்டுகள்
அத்தனையும் அமுதம் உண்டதுபோல் அலர்ந்திட
இறுமாப்பில் நிலவும் தடாகத்து
படிக நீரில் தன்முகம் காட்ட

என்னவள் தடாகத்தில் தன்முகம் காட்டி
நிலவின் பிம்பம் பார்க்க வெட்கியதோ
நிலவு அங்கு காணவில்லை இப்போது காணாமல்
போனது இவள் முகத்தின் பொலிவில் மயங்கி
இல்லை வெட்கி இவள்தான் அழகி என்று
சொல்லிவிட்டு போனதோ வான்நிலவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-22, 3:54 pm)
Tanglish : avalum nilavum
பார்வை : 277

மேலே