மகனதிகாரம்-12

வாழைப்பழத்தை
வா..பா.. என்கிறாய்
திராட்சையை
ஆச்சை.. என்கிறாய்
சரியான பதத்தை
சொல்லி தர முயன்று
தோற்றுப்போன வருத்தத்தில்
நான் ....

புதுப் பெயர்கள்
கிடைத்த
புத்துணர்ச்சியில்
பழங்கள் ..


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (15-Jun-22, 8:10 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 80

மேலே