இன்னிசை பாடிவரும் தென்றல் இளங்காற்று

இன்னிசை பாடிவரும் தென்றல் இளங்காற்று
தென்னங்கீற் றில்முத்த மிட்டுனது மெல்லிதழ்
புன்னகை முத்துக் களுடன் விளையாடி
என்னிடம்கா தல்பே சுது

----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-22, 7:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே