எப்பிறப்பிலும் பிரியோம்
நேரிசை வெண்பா
எப்பிறவி தன்னில் பிரியோம் எனக்கூறா
இப்பிறவி என்றேன் இடறநா -- அப்போ
அடுத்தப் பிறவியில் யாமுமொன்று சேராக்
கெடுமென றவள்விழிசிந் திற்று
எப்பிறப்பிலும் என்பதைத் தவறாக இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம்
சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
காமத்துப்பால். குறள் 5/24. வதுப் பாடல்
சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
காமத்துப்பால். குறள் 5/24. வதுப் பாடல்