தீய மக்களினும் விலங்குகள் மிக நல்லன – அறநெறிச்சாரம் 122

நேரிசை வெண்பா
(’க்’ ‘ச்’ வல்லின எதுகை)

இக்காலத் திவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை - மெச்சா(து)
அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக. 122

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

இவ்வுடல் இப்பொழுதே அழியுந் தன்மையாயிருத்தலை அறிந்து மறவாமல் குறித்துக் கொண்டு மறம் தங்கண் நிகழாதபடித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை புகழாமல்,

நொந்து தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும் மிருகங்கள் மிக நல்லனவாகும்.

குறிப்பு:

இகழ்வால் வரும் பாவத்தை அடையாமையின் விலங்குகள் நல்லனவாயின.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-22, 6:09 pm)
பார்வை : 60

மேலே