முதன் முதலாக பரவசமானேன் 555

***முதன் முதலாக பரவசமானேன் 555 ***


என்னுயிரே...


அதிகாலை நேரம் சூரியன்
கண்விழிக்காத போது...

லேசாக பனி படர்ந்த நேரம்
சாலையில் ஒரு நடை பயணம்...

என் எதிரே ஓடிவந்த
பெண்ணோவியம் நீ...

கடலுக்குள் மையம்
கொண்ட புயல் போல...

என் மனதில் நிமிடத்தில்
புயலாய் மையம் கொண்டாய்...

மொட்டுக்குள் இருக்கும்
தேன்துளி போல...

என் மனதுக்குள்
நீ தித்திக்கிறாய்...

உன்மேல் வந்த ஆசைக்கும்
அன்புக்கும் அடைக்கலம் கொடுத்தேன்...

உன்னிடம்
சொல்லத்தான் தெரியவில்லை...

தினம் உன்
விழிகளை
பார்த்தே நலம் விசாரித்ததால்...

மழைமேக மின்னலையும் ரசித்து
பார்க்கி
றேன் இமைக்காமல்...

உன் மடியில் நிமிடங்கள்
தலை சாய்க்க வேண்டும்...

நாளை என்னும்
வார்த்தையை மறந்துவிடுவோம்...

இந்த நிமிடமே இறுதி
நிமிடமாக காதலிப்போம்...

உருவமில்லாத காதலுக்கு
உருவம் கொடுப்போம்...

நீயும் நானும் சேர்ந்து
தள்ளா
டி மரிக்கும் வயதுவரை.....ஐ லவ் யு...


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (24-Jun-22, 4:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 320

மேலே