உயிருடன் கொல்லும் காதல்

முப்பது வயதில் உதிராத பழமுதிர்ச்சோலை என் அழகு நிலா
குளிரும் காற்றில் கண்டேன் கன்னியான அந்த கனியான பலா
பூரித்த அவளழகில் மயங்கி கனவில் சென்றேன் இன்ப உலா
ஒரு நாள் அறிந்து கொண்டேன் என் மனக்காதலி பெயர் கலா

ஒரு வருடம் நான் கவனித்தும் அவள் எனை நோக்கவில்லை
ஆசை காதலி அப்படி நடந்தாலும் ஏனோ மனது நோகவில்லை
ஒரு நாள் கனவில் கன்னி வந்தாள், என்னருகில் வரவில்லை
நான் ஏக்கம் காதல் பொங்க பார்த்தும் அவள் கவனிக்கவில்லை

கனவில் பொறுமையின்றி என் உதடுகளை சேர்த்து குவித்தேன்
அதை கவனித்தாள் மங்கை, அந்நேரம் நான் மெல்ல சிரித்தேன்
அவள் மெதுவாக நெருங்கி என்னருகில் வர நான் உறைந்தேன்
அவள் பட்டு கைகள் என் கைகளில் பட்டு எனை நான் மறந்தேன்

கலாவுடைய இனிய உதடுகள் என் உதடுகளை கண்டு துடித்தது
என் கைகள் அவள் இடையை பற்ற அவளது தேகம் கொதித்தது
அவள் ஆசை கொண்டு எனைத்தழுவ உடல் உள்ளம் சிலிர்த்தது
என் தேகத்தின் அங்கங்கள் அங்கங்கே எழுந்து காமம் இசைத்தது

மூடிய சேலையின் அழகுகளை சோலையில் கண்டு அதிர்ந்தேன்
நான் அவளை மெல்ல ஆராய்ச்சி செய்து இன்பங்கள் அறிந்தேன்
அவள் குரலை கேட்டிராத நான் அவள் முனகுவதை உணர்ந்தேன்
நான் காணாத காமசுகத்தை கலா கொடுக்க அவளிடம் வீழ்ந்தேன்
சுகத்தின் உச்சிக்கு அவளுடன் சென்ற நான், ஏன் கண் விழித்தேன்?

மறுநாள் அவள் வேறு ஒரு வாலிபனுடன் சிரித்து பேசிட கண்டேன்
தொடர்ந்து அவர்கள் சந்திப்பதை கண்டு மனம் பித்தாகிப்போனேன்
ஒருநாள் கலாவை தனியே சந்தித்து 'என் கதி என்னவென கேட்டேன்'
"ஊர்பேர் தெரியாத உனக்கு எத்தனை திமிரு, போ, வேலையை பார்"
இந்த பதிலுக்கு பதில் அவள் தீயால் எனை கொளுத்தியிருக்கலாமே?
நான் பார்த்த முதல்நாளே இந்த விஷ(ய)த்தை கக்கியிருக்கலாமே?
நான் அன்று அவளை கண்டாலும், காணாமல் இருந்திருக்கலாமே?
அவளை நினைத்து மனக்கோட்டை கட்டாமல் பிழைத்திருக்கலாமே?
என்னை உயிருடன் சாகடித்த இறைவன் உயிருடன் இருக்கலாமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-22, 5:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 855

மேலே