ஓநந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ...நந்தலாலா
எமக்காக பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா..
அடிமையென பிறந்தோம்
அடிமையென வளர்ந்தோம்
அடிமையென வாழ்ந்தோம்
உரிமையினை இழந்தோம்
தொலைத்தோம்...தொலைந்தோம்..
தோம்...தோம்...

கைகட்டி வாய்பொத்தி
வாழ்வுக்காய் கையேந்தி
வாழ ஓர் வீடின்றி
தெரு நாயாய் நிற்கின்றோம்.
நாய் கூட வீட்டில் கொஞ்சும்
பேய்போல எம்மை தள்ளும்
நானென்ன நாயா?...பேயா?
நீ சொல்லு நந்தலாலா.

படைத்தவன் கண்கள்மூடி
கடுந்தவம் புரியும்போது
எடுத்தவன் எல்லாம் இங்கே
தண்டெடுத்து ஆள்கின்றானே
எரிகின்ற எந்தன் வாழ்வில்
நெய் ஊற்றி எரிக்கின்றானே
நானென்ன நெய்யா?...தீயா?
நீ சொல்லு நந்தலாலா..

இறைவா உந்தன் படைப்பில்
ஏற்றமும் தாழ்வுமில்லை
மனிதராய் பிறந்தபின்னே
எதற்கிந்த வேற்றுமை ?
குடிக்கின்ற குவளைகூட
இரண்டாகி போனதென்ன?
நானென்ன தவளையா?...குவளையா?
நீ சொல்லு நந்தலாலா.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Jun-22, 8:02 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 52

மேலே