செறிவாய்ச் சொல்லி விளங்க வைப்பேன் - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 / காய்)
(1, 5 சீர்களில் மோனை)
அறுசீ ரென்றும் எழுசீ ரென்றும்
..அவலோ கிதமுஞ் சொல்வதெல்லாம்
அறிந்தே சொல்வ தில்லை அறிஞர்
..அங்கு யாருண் டறியவில்லை
குறிப்பாய் எழுதி னாலும் யாரும்
.குறிப்ப றிந்து பேசவில்லை
செறிவாய்ச் சொல்லி விளங்க வைப்பேன்
..செவி,கொ டுக்க யாருமில்லை!
– வ.க.கன்னியப்பன்