பள்ளியிலிருந்து கடைசி புள்ளிவரை

பத்து வயதினில் பால்மனம் மாறுது
பதினைந்தில் பாலுணர்வு அரும்புது
பதினேழில் ஓர் ஆசை தொடங்குது
பதினெட்டில் எதிர் அழகை ரசிக்குது
இருபதில் காதல் களையை கட்டுது
இருபத்ரெண்டில் நழுவி சொட்டுது
இருபத்திஐந்தில் கவர்ச்சி மோதுது
இருபத்தெட்டில் காமம் பொழியுது
முப்பதிலோ மூன்று முறை நாடுது
நாற்பதில் பெரிய மாற்றம் தேடுது
நாற்பத்தைந்தில் அது யோசிக்குது
ஐம்பதில் அங்குமிங்கும் பார்க்குது
ஐம்பத்தைந்தில் ஆசை முடங்குது
அறுபதில் ஆன்மீக அன்பு உருகுது
அறுபத்திஐந்தில் ஆசை ஒடுங்குது
எழுபது வந்து எல்லாம் அடங்குது!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-22, 9:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 106

மேலே