தத்துவத் தூறல்

அன்பு இல்லாத அறமும்;
பன்பு இல்லாத பாசமும்;
ஆர்வம் இல்லாத ஆசையும்;
இன்பம் இல்லாத சுகமும்; ​
ஈகையில்லாத தர்மமும்;
உதவாத கரமும்;
ஊக்கம் இல்லாத உழைப்பும்;
எதிர்ப்பு இல்லாத போட்டியும்;
ஏக்கம் இல்லாத பாசமும்;
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையும்;
ஓசையில்லாத சப்தமும் ;
ஓய்வு இல்லாத வாழ்க்கையும் பயன் தறாது;

சுடுவோர், இடுவோர் திரும்புவதில்லை;
படுவோர், கெடுவோர், விடுவோர், விழுவோர், எழுவோர், உறவோர், உணர்வோர், தேடுவோர், ஓடுவோர், திரும்புவோர், திருந்துவோர்; திகைப்போர்; வதைப் போர்; அழுவார் ;
வாழ்த்துவோர்; வெறுப்போர் பொருப்வோர்; மறைப்போர்; இறப்போர்; விரைப்போர்; இல்லாத வாழ்க்கைப் பக்கம் இல்லை;

படுவோர் கெடுவோர் இல்லை;
கெடுவோர், கேடு விளைவிக்காமல் இருப்பதில்லை;
எடுப்போர் தருபவர் இல்லை;
தடுப்போர், எடுப்பதில்லை;
துடிப்போர் நடிப்போர் இல்லை;
தவிப்போர் திகைப்போர் இல்லை;
தனிமையும் சுடாது விடுவதில்லை;
தாழ்ந்தாலும் வாழ்ந்தவன் தயவை நாடுவதில்லை;​
தூற்றாத பதர் தூசியாகமல் இருபிப்பதில்லை;
துணியாதவன் குனியாதவனாக இருப்பதில்லை
குறைகாண்பவன் உள்ளம் கறைபடாமல் இருப்பதில்லை
குற்றம் செய்தவன் உள்ளம் குடையாமல் இருப்பதில்லை ;
சுற்றும் கால்கள் வீடு திரும்ப விரும்புவது இல்லை;
சுற்றும் சூறாவளி சுகம் தேடி ஒரு இடத்தில் தங்குவது இல்லை ;
சுழலும் பூமி நிற்பதில்லை ;
சோகம் சுடாமல் இருப்பதில்லை;
சுகம் தொடாமல் விடுவதில்லை;
சாபம் சபிக்காது விடுவதில்லை;
பாவம் பழிதீர்க்காது விடுவதில்லை;
பகை புகையாது வருவதில்லை;
பள்ளம் பறிக்காது வருவதில்லை
உள்ளம் சுமக்காது இருப்பதில்லை
இல்லமும் உள்ளமும் நிரம்ப வில்லை என்றல் சோகம் வடியும் ;
மன்னிப்போர் எதையும் இழப்பதில்லை;
மறப்போருக்கு பகை இல்லை;
துறப்போருக்கு இல்லரம் இல்லை;
துறவிக்கு கூட்டம் தேவை யில்லை;
மறதிக்கு மருந்து இல்லை;
மதிக்காதவன் மனிதன் இல்லை;
மதத்திற்கு சாயம் தேவையில்லை;
மனித நேயத்திக்கு செல்வாக்கு தேவையில்லை;
தலைவனுக்கு பண, பதவி ஆசை வேண்டியதில்லை;
கையூட்டால் வாங்கி கைகட்டத் தேவையில்லை;
நியாயத்தை விலை பேசி, நீதியை கொல்லாதே; அநீதிக்கு துணைபோகாதே;
செய்நன்றி மறந்தோர் மனிதனில்லை;
ஊமை உலருவதில்லை;
உடமைகளும் உடல்போல் புதையாது, தீயாது விடுவதில்லை;
வெறுஞ்சோறு வாயிக்குள் போவதில்லை;
வேகாத சோறு வயித்துக்கு உதவாது;
வெறும் கை வேலைக்கு உதவாது;
வெட்டுப்பட்ட கை சும்மா இருக்காது;
வெய்ய வினைகள் விரட்டி வராது விடாது;
கர்ம வினை காலை கவ்வாது விடாது;
வீரம் இல்லாத வீராப்பு சோரம் போகாது இருக்காது;
ஈரம் இல்லாத உள்ளத்தில் இரக்கம் பிறக்காது;
ஈரம் இல்லாத இடத்தில் ஈ மொய்க்காது;​
ஈதல் இல்லாமல் ஈகைக்கு இடம் ஏது;
ஈவதெல்லாம் தர்மம் இல்லை;
இல்லார்க்கு கொடுப்பதே தர்மம்;
ஈதல் இல்லாமையில் பிறந்தால் சிறப்பேது;
சோகத்தில் தவிக்கும் ஈகைக்கு பயன் ஏது;
இல்லறத்தில் எள் அளவும் சந்தேகம் புகின், இல்லறம் நல்லறம் ஆவதில்லை;
சிறப்பால் உயர்வதை விட;
பிறப்பால் உயர்வடைவதால் பெறுமை ஏது;
அக்கறை இல்லாதனுக்கு, சக்கரையும் தித்திக்காது;
நொந்த மனசு, நோய்வாய் பாடாமல் இருக்காது;
சொந்த மனசு, உறவை தேடாமல் இருக்காது;

பசியை போக்க, பத்துகாத தூரம் நடப்பான் ஏழை;
புசித்தது செரிக்க பத்துகாத தூரம் நடப்பான் பணக்காரன்;​

வானம் பொய்த்தாலும் மனம் தழறக்கூடாது;
வாழ்க்கை பொய்த்தாலும் நம்பிக்கை இழக்கக் சுடாது;
ஊனம் இருந்தாலும், உன் மனம் ஊனமாகக் சுடாது;
உண்மை பொய்த்தாலும், உன் உள்ளம் உடையக்கூடாது;
கிறுக்குபவன் எல்லாம் கிறுக்கன் இல்லை;
கணக்கு பார்ப்பவன் எல்லாம் கணக்கன் இல்லை;
கண்கள் வடிப்பதெல்லாம் கருணை இல்லை;
கண்ணீர் சிந்திதான் இரக்கம் பிறக்கும் என்பதில்லை;
பசிக்காக திருடாதே;
பதவிக்காக பழியை சுமக்காதே;
பல்லைகாட்டி இழிப்பதால் இரக்கம் பிறக்காது;
பல் இல்லாவிடினும் பல்செட்டை கட்டி சொல்லை அழகு படுத்து;
கேலி செய்வதை விட கேள்வி கேட்டுபார்;
வேள்வி செய்ய முடியவில்லை என்றாலும், பிறர் வேதனையை துடைத்துப்பார்;
எடுத்து பார்பதைவிட கொடுத்துபார்;
வாரி வழங்கா விட்டாலும், வந்தவர்களை தூற்றாதே;
வாரி கொட்டாவிடினும்
வார்த்தையை கொட்டி,
வாங்கி கட்டிக்கொள்ளாதே;
இளமையில் தொலைத்து விட்டு முதுமையில் தேடாதே;
இருக்கு இருக்கு என்று செலவு செய்து விட்டு,
இல்லாதபோது தவிக்காதே;
நண்பன் நண்பன் என்று வேஷம் போடுவதைவிட, பகைவன் என்ற பழியை சுமப்பது மேல் ;
மதுவை அருந்தி மானம் கெட்டு வாழ்வதைவிட,மனம் உவந்து இறப்பதே மேல்;
இலைத்துளிர் அது மழை மீது வைத்த நம்பிக்கை;
மனத்துளிர் உன்மீது வைக்கும் நம்பிக்கை;
நம்மை நாமே நம்பாவிடின்;
நம்மை நம்புவர் யார்;
உன் கையையே இழந்திருந்தாலும் நம்பிக்(கை)யை இழக்காதே;
இருக்கத்தோடு இருக்காது;
விடியலை நம்பி இரவில் உறங்கப்போ;
இருப்போம் என்றே வாழ்ந்து பார்;
வாழ்வோம் என்றே சாதித்துப் பார்;
இறப்போம் என்றே கொடுத்துப்பார்;
மன்னிப்போம் என்றே நேசித்துப்பார்;
நம்பிக்கை நாணயம் நேர்மையோடு வாழ்ந்து பார்,

அன்பன்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (29-Jun-22, 8:45 am)
பார்வை : 73

மேலே