வாழ்க்கை தத்துவம்

♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

தீட்டு என்ற
ஜாதி கேட்டு
தண்ணீர் வாங்கி
குடிப்பவர்கள்...
இரத்தம்
வாங்கும் போது மட்டும்
ஜாதி கேட்பதில்லையே!
அப்போது
எங்கே போனது
அவர்கள் தீட்டு....?

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

பிரச்சனை இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்று
பலர் பிராத்தனை
செய்கின்றனர்....
பிரச்சனைக்கு
இன்னொரு பெயர் தான்
வாழ்க்கை என்பதை
அறியாமல்...!!!

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

உன்னை
படைக்கும்போதே
உனக்கானதும்
சேர்த்தே படைக்கப்படுகிறது...
அதை
கூட்டவோ குறைக்கவோ படைத்தவனாலும் முடியாது
ஒருவனால் மட்டுமே முடியும்
அந்த ஒருவன் தான்
" நீ "

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
நம்முடைய மனம்
காயம்படாமல்
பழகக் கற்றுக்கொள்வது
சிறந்தது .....
அதைவிடச் சிறந்தது
மற்றவர்கள் மனம்
காயப்படாமல்
பேசக் கற்றுக்கொள்வது....

*கவிதை ரசிகன்*

♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-Jun-22, 8:50 am)
பார்வை : 177

மேலே