கொள்ளும் கழுதையும்

கொள்ளை அவித்து அவித்து
கொட்டி வைத்தான்
லாயத்தில் குதிரைகள்
இல்லை
கூட்டமாய் வந்த கழுதைகள்
கொள்ளை தின்றன
காகிதம் தின்னும் கழுதைகள்
கொள் உண்ட மகிழ்ச்சிப் போதையில்
துள்ளிக் குதித்து ஆடி ஓடின
பந்தயத்திற்கும் உதவாத
வண்டிக்கும் உதவியில்லா கழுதைகள்
பொதியைத்தான் சுமந்து சென்றன !!!

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jun-22, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே