ஒன்று

பெற்றோரிடம் பெறாத ஒன்று
உடன் பிறந்தவர்கள் உரிமையாடத ஒன்று
காதல் கூட கற்பிக்காத ஒன்று
வாழ்ககையும் விளக்காத ஒன்று
மனைவியும் மறந்த ஒன்று

பிள்ளைகள் அறியா ஒன்று
புத்தகத்திலும் புரியா ஒன்று

அது என்ன என்று எனக்கு புரிந்த இன்று
இன்றியமையா இன்று
எ‌ன்றுமாறா நேற்று

நாம் நிற்கும் பூமி சுற்றுவது நம்மாள் இல்லையென்றால்
உதயமாகும் சூரியன் நம்மாள் இல்லையென்றால்

நாளை உள்ளதென்று உள்ளம் எண்ணுவது
நட்சத்திரம் மின்னும் வானம் அதை பகலில் காணும் நானும்
வண்ணம் மாறும் வானும் இருட்டான இரவும் அதை விரட்ட வளரும் நிலவும் கரைந்து போகும் ஒரு நாளும்
அமாவாசை அன்று வானில் ஒளிரும் வேற்று கிரகம் போல்

எண்ணுயுருக்கு ஆபத்தாய் வந்த நுண்ணுயிர்

இந்நேரம் அது உன் நேரம் அதுதான் பொன் நேரம் என என்னை தனிமை படுத்தி உணர்த்தி சென்ற

#கொ ரா னா வுக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:57 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : ondru
பார்வை : 53

மேலே