நாம் எல்லாம் தெரிந்துதான் செய்கிறோமா

நாம் யார், எதற்கு பிறந்திருக்கிறோம் என்று அறிந்துதான் இவ்வுலகில் பிறந்தோமா?
நன்கு உண்டு, உடலை வலிமையாக வளர்த்து வாலிபனாகத்தான் நினைத்தோமா?
கல்விகற்று தொழில் புரிந்து ஆஹா ஓஹோ அப்படி இருப்பேன் என நினைத்தோமா?
இளமையில் காதல் கீதல் மோதல் என்ற நோய் வாய்ப்படுவோம் என்றறிந்தோமா?
பலான பெண்களை பார்ப்போம் கண்ணடிப்போம் காதலிப்போம் என எண்ணினோமா?
விரும்பியவளை விட்டு வேறொருவளை மணமுடிப்போம் என கனவு கண்டோமா?
ஒன்று, இரண்டு ,என கணக்கிட்டு குழந்தைகள் பெறுவதை முன்பே கணித்தோமா?
இப்படிப்பட்ட குணங்கள் ஒழுக்கங்கள் கொண்டவனாக இருக்க முடிவு கட்டினோமா?
சினிமா, டிவி , உண்பது, உறங்குவது இவைதவிர வேறு ஏதேனும் தான் அறிந்தோமா?
அரசியல், சினிமா, அரட்டை இவையன்றி உருப்படியாக ஏதேனும் விவாதித்தோமா?
அறுபது வந்ததும் வாழ்க்கையின் பெரும்பகுதி வீணாகியதே என்று புலம்புகிறோமா?
இன்னும் வயது ஏற, நான் மீண்டும் இளைஞனாகவேண்டும் என ஆசைப்படுகிறோமா?
இன்பங்கள் இன்னல்கள் அனுபவித்தும் மீண்டும் பிறக்கவேண்டும் என் ஏங்குகிறோமா?
கடைசி மூச்சு விடும்போதும் பணத்தை கண்டால், இன்னும் இன்பம் வேண்டுகிறோமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Jun-22, 10:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 79

மேலே