காதல்

குயிலாய்ப் பாடி வந்தாள்
மயிலாய் ஆடி வந்தாள்
நதியாய் ஓடி வந்தாள்
வசந்தத்தின் மழையாய் வந்து
என்னை நனைத்தாள் காதல்
மழைத்துளிகளால் கன்னத்தில்
முத்தமிட்டாள் அவள் செவ்விதழ்கள்
சேற்றில் பதிந்த பாதம்போல்
என்கன்னத்தில் ஆழ்ந்து படிந்திடவே
மலரின் தேன் முழுவதும்
குடித்து மயங்கி கிடக்கும்
வண்டானேன் நான் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-22, 11:42 am)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே