விலகியே போ

நீயும் நானும் ஒரு வழி பாதை
நினைத்தாலும் பிரிக்க முடியாதே
நீயும் நானும் இரு விழி பார்வை
முடிந்தாலும் நினைவு கொல்லதோ

தூரத்தில் வானம்
அருகினில் நீதான்
அசைபோடும் கண்கள் ஓயாதே

காற்றும் பூவும்
தொடுகிற காதல்
விழுந்தாலும் பூக்கள் கலங்காதே

விலகி போ விலகி போ
விடுகின்ற மூச்சும் நிக்கட்டும்.

எழுதியவர் : நா விஜய் பாரதி (4-Jul-22, 2:28 pm)
சேர்த்தது : நா விஜய் பாரதி
Tanglish : vilakiye po
பார்வை : 106

மேலே