549 கருவின்றி உலகாக்கிக் காப்போன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 7

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

மணலொன்றான் மலைசெய் வோனை
..நோக்கிடின் மாவி யப்பாம்;
அணுவொன்று மில்லா தண்ட
..மனைத்துஞ்செய் திருந்தே கங்கள்
துணையில்சுக் கிலவி ரத்தச்
..சிறுதுளி யான மைத்துப்
புணர்சிறு வித்தாற் பார
..மரமெலாம் புரிந்தோன் தேவே. 7

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மணலைக் கொண்டு மலையொன்று ஒருவன் உண்டாக்குவானாயின் பெருவியப்புக் கொள்வோம்.

அணுவாம் பருப்பொருள் ஏதுமிலாது அளவிலாத உலகங்களையும், ஒப்பில்லாத வெண்ணீர் செந்நீரால் ஆகும் எறும்பு முதல் யானை ஈறாகிய பல்வேறு உடம்புகளையும், நுண்ணிய விதையால் பெரிய ஆலமரம் போன்ற பல மரங்களையும் திருவுள்ளத்தால் படைத்தருளிய செம்பொருள் முழுமுதல் தெய்வமாகும்.

வியப்பு-மருட்சி; அதிசயம். துணையில்-ஒப்பில்லாத.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே