வான்நிலா கூப்பிடுதே வா - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மெல்ல அசைந்துவரும் மேனியெழில் தென்றலெனச்
சொல்லிடுமே பூங்கூந்தல் சூட்சுமமாய் - ஒல்லுகின்ற
தேன்பொதிந்த வாசம் திரட்டிவந் தங்குநிற்க
வான்நிலா கூப்பிடுதே வா!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 9:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே