புங்கு - காட்டுப்புங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புங்கி(ன்)விதை காற்கிரந்தி புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்னி கண்ணோய்க்கும் ஆம்பேதி - யங்கட்டுங்
காட்டுப்புங் கின்விதைக்கும் கண்டதே மற்சொறிமெய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

புங்கன்வித்து புண் கரப்பான், காதெழுச்சி, சன்னி, கண்ணோய் இவற்றைப் போக்கும்; மலத்தைக் கட்டும் . காட்டுப்புங்கன் வித்து தேமல், புடை, கீல்வாயு இவற்றை நீக்கும்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 12:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே