மருதோன்றி - வேம்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மருதோன்றி யின்விதைக்கு மாபில்லி சூன்யம்
விருதாண்ட பேய்பூதம் மேவுங் - கருதூன்றி
வேம்பின் விதைக்கு விஷஞ்சன்னி பாதமுதல்
தேம்பிவிழுந் தோடுமெனத் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

மருதோன்றி வித்துக்குப் பில்லி சூனியம், பேய்பூதம் இவற்றைப் போக்கும் குணமுண்டு; வேப்பம் வித்துக்கு தாவர சங்கமவிடங்களும் சன்னியும் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே