அங்கும் இங்குமாய் ஆர்க்கும்நீர் வீழ்ச்சி - கலிவிருத்தம்

கலிவிருத்தம் எழுதுவது எளிதன்று! நான்கு சீர், நான்கடி இருந்தால் மட்டும் போதாது.

(அவலோகிதம் காட்டுவது பல நேரங்களில் தவறு; அது ஓரளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்)

கலி விருத்தத்தில் பலவகை உண்டு; அததற்கு வெவ்வேறு வாய்பாடுகளும், இலக்கண வரைமுறைகளும் உண்டு. சீர் ஒழுங்கும் வேண்டும். ஓர் அசையும், மூன்று அசைகளுக்கு மேலும் வராது.

கனிச்சீர் வந்தால், ஒவ்வோர் அடியிலும் அதே சீரில் கனிச்சீர் வர வேண்டும்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்;
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

அங்கும் இங்குமாய் ஆர்க்கும்நீர் வீழ்ச்சியும்
பொங்குங் குற்றாலப் போக்கும் பொழிலுமே
எங்குந் தூங்கும் எழில்மலை வண்ணமே
அங்கம் எங்கணும் ஆசையும் பொங்குமே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 2:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே