உன் ஆறுதல் இன்றி தவிக்கிறேன் 555

***உன் ஆறுதல் இன்றி தவிக்கிறேன் 555 ***


என்னுயிரே...


என்னில் இருந்த காயத்திற்கு
ஆறுதலாக நீ வந்தாய்...

இன்று உன்னால் உண்டான
காயத்திற்கு ஆறு
லாக யாருமில்லை...

இணைந்திருந்த நம்
கைகள் பிரிந்துவிட்டது...

ஊன்றுகோலாய்
இருந்தவள் நீதான்...

உன் ஆறுதல் இன்றி
தவிக்கிறேன் தனிமையில்...

உன் நினைவு
வரும்போதெல்லாம்...

சி
ல நேரம் சிரிக்கிறேன்
பல நேரம் கரைகிறேன்...

நீ பிரிந்தால் வலிக்கும் என்று
தெரியவில்லை அன்று எனக்கு...

ஊரெங்கும் உறங்குது
வீதியெங்கும் ஒளிருது...

நானோ உறங்காமல் என்
மனதிலோ இருள் சூழ்ந்துவிட்டது...

காதலோடு ஆயிரம்
முத்தங்கள் கொடுக்கிறேன்...

உன்
புகைப்படத்திற்கு
என் கைபேசியில்...

ஆறுதலாக மீண்டும் ஒரு
வார்த்தை பேசுவா
யா...

உன் கைபேசியில் இருந்து
என் கைபேசியில்...

பல கேள்விகளுக்கு
விடையாய் வந்தவள் நீ...

இன்று ஆயிரம் கேள்விகளை
என்னுள் விதைத்துவிட்டு...

என்னையும் காதலை மறந்து
சென்றுவிட்டாய்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (6-Jul-22, 8:22 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 206

மேலே