ஊரையும் ஈர்க்கும்

கலிவிருத்தம்

கலிப்பா. மூன்றசை தாண்டிட தப்பது
கலிப்பா வன்றென அறிந்திடு பாவல
சொலிக்க நீபுனை மோனையும் பொழிப்பாய்
ஒலிக்கும் பாட்டது ஊரையும் ஈர்க்குமே



அடிதோரும் கலி, சொலி,. ஒலி , என்பதில் லி ஏதுகையை கவனியுங்கள்


புளிமா கூவிளம். கூவிளம். கூவிளம்

என்ற அமைப்பில் கலிவிருத்தம் அமை துள்ளது எல்லாமே
ஈரசை சீரால் அமைந்துள்ளதை காணுங்கள்


கலிவிருத்தம் கற்றுக்கொள்வோர் முக்கியமாக அறிய வேண்டியது

1. கலிப்பாவில் இரண்டசை மாச்சீர் மூன்றசை கொண்ட காய்ச்சீர் தாண்டி
நாலசை சீர்கள் வருதல் கூடாது என்பது விதி.

2. அடிதோரும் எதுகையிருப்பினும் கலிப்பா வாகுமோ. மூன்றாம் சிரில்
பொழிப்பு மோனை சேர்ந்திடத்தான் அதற்குண்டான ஒசைநயம்
இசையில் ஒலிக்கும்.

3. பாவினம் என்றால் அதுபோல போலியென்பது பொருள்..
போலிப்பாவினம் தள்ளி இலக்கணமாய் எழுதம்
கலிப்பா இராகத்தை கொடுக்கும் மற்றவை இராகத்தைக்
கெடுக்கும். என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்


கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக

தயவுசெய்து இலக்கணம் இல்லாத கசடுகளுக்கு இன்ன பாடல் என்று
தவறியும் பெயர் சூட்டி மகிழாதீர்கள். .



.........

எழுதியவர் : பழனி ராஜன் (7-Jul-22, 1:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே