குறிப்பேடு

ஆணுக்கு பெண் நிகர் ரென்பது
வெறும் வாய்ச்சொல் அளவில் மட்டுமே...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடற்ற
சூழல் தாயின் கருவறை வரைதான்...

அதைத் தாண்டி தடம் பதிக்குங்கால்
சூழல் மாறுபட்டு, யுத்தம் தொடங்கும்
யுத்த களமாக பெண்ணின் வாழ்க்கை!

பெற்றோரி லிருந்து அறிந்தவர்,
தெறிந்தவர், ஆன்றோர், சான்றோர்,
சமுதாயம் என்று அனைவரும்
பெண்ணிற்கான இலக்கணத்தை எழுதும்
கரும்பலகையாக மாறிப் போகும்
அவலம் நிறைவேறுகின்றதே?

ஒருகால வரையறையில், பிறப்பின்
போது வெண் குறிப்பேடாக
இருந்த அவளின் நிறம் மாற்றப்
படுகிறதே!

இறுதியில் அவளுல் அவளையே
தேடும் நிலைக்கு ஆளாக்கப்படும்
பெண், நடுவீதியில் நிறுத்தப்படுகிறாள்...

அவளுக்கான வாழ்க்கையை
சமுதாயமே வாழுமேயானால்
அவள் பிறப்பின் பயன்தான் என்ன?

ஆண்களின் கைபாவையாக
பெண் மாற்றப்படுவது ஏன்?

பெண்ணின் ஜனனத்தின்
தேவைதான் என்ன?

குடும்ப விருத்தி
மட்டும்தான் குறிக்கோளா?

எழுதியவர் : கவி பாரதீ (11-Jul-22, 8:14 am)
பார்வை : 78

மேலே