முத்தம்❤

அழகு முத்தம்
அன்பின் பரிமாற்றம்!
மனம் அறிந்த
ஒரே மொழி!
மனதின் தேவைகளை
வெளிப்படுத்தும் கருவி!
தெவிட்டாத இளம்
தென்றல் மனதுக்கு!!

பரஸ்பரம் கொண்டுள்ள
அன்பின் ஆதாரம்!
அட்சரம் பிசகாமல்
மனதை கற்றறியும் கலை!
கவலைகளை விலக்கும்
அரு மருந்து!!

விட்டில்களின் கருவியும்
இம்முத்தம் தான்!
மலர்களை மதியிழக்கச்
செய்வதும் இதுவே...
அனைத்து முத்தமும்
அன்பாகாது...
மலர்கள் மனதிற்கொண்டு
வாழ்வதே உசிதம்...
பாகுபடுத்தி அறிய
பட்டப்படிப்பு தேவையில்லை...
முழு விழிப்புணர்வு கொண்டு
நடமாடுதல் மட்டுமே அவசியம்!
சிறு அறிவுரை, மனதிற்
கொண்டால் வாழ்வு சிறக்கும்!!

எழுதியவர் : கவி பாரதீ (12-Jul-22, 12:48 pm)
பார்வை : 201

மேலே