திரௌபதியின் முற்பிறப்பு வரலாறு - விருத்தக் கலித்துறை

விருத்தக் கலித்துறை

மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில்
நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள்
வாளார் தடங்க ணவட்காரண வாணர்க் கென்றும்
கேளான மௌற்கல் லியனென்பவன் கேள்வ னானான்! 73

- திரௌபதி மாலை இட்ட சருக்கம்

பொருளுரை:

மூண்டெரிகிற நிறைந்த யாகாக்கினியில் தோன்றியவளான இத்திரௌபதி முற்பிறப்பில் நாளாயணி யென்றுபுகழ் நிறைந்த பெருமையையுடைய பெயரினாற் சிறந்தவள்;

வாட்படைபோன்ற பெரிய கண்களையுடைய அவளுக்கு அந்தணர்களுக்கு எப்பொழுதும் தலைவனான மௌத்கல்யன் என்னும் முனிவன் கணவனாயினான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 11:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே