பாபக் கணக்கு

உலகம் போற்றும் வில்லாலணை
போர் முனையில் நிருத்தி
பாவ புண்யம் உபதேஷித்த
அஷ்டா வதாரி அவதரித்த
அவணியிலே!!!

சமத்துவம் பேசி சக
மானிடர் க்காக உயிர்
தியா கித்ததெய் வங்கள்
பிறப் பெடுத்த இப்புண்ய
பூமியிலே!!!

சிறிய பூமியாம் சிரியா,
சிரித்து மகிழும் சிறுவயதில்
சிரிப்பறியா மலர்கள் மலர்ந்து
கருகிட காண்போம்...

விலை மதிப்பில்லா உயிர்கள்
உருவம் கொள்ளும் முன்பேஉரு
தெறியாமல் அளிக்கப் படுவதை
மனிதாபி மானம் அற்று
அரங் கேற்றும், கொடிய
மிருகங்கள் உலாவும்
கொலைகளம்...

மலரும் முன்பே அச்சிறு
சிசு செய்த பெரும்
பாபம் தான் என்ன?
கரு வரையே கல்லரையாக
மாற, அதைக் கண்டு
கணநேரம் கூட நின்று
துடிக்காத இதயம் கொண்ட
மனிதனை, மனிதனாக
கணக்கிட இயலாதே...

வெடித் துக்கரு கிடும்
உயிர் பூக்கள் உறங்க
ஆறடி நிலமும் அற்ற
அச்சிறிய சிரியாவில்
ஆறடியில் அறுபது
உயிர்கள் புதைந்திடும்
கொடுமையைக் கண்டு
புளுவாக துடிக்குது
இதயம்...

சின்னஞ் சிறு மொட்டுக்கள்
மலர்ந்து விகசிக்கும்
முன்பே குருதிக் குழம்பில்
நீந்தும் அவளம் அரங்கேறும்
அச்சிறு பூமியில் உதித்த
உயிர்கள் அடையும் வேதனை
யாவுமே முன் ஜென்ம
பாபக் கணக்கின் பலன்
எனில் நம்பவும் இயலுமோ...

பாபம் என்ற பெயரில்
சிறு மொட்டுக் களையும்
குருதியில் குளிப்பாட்டும்
படைத்தவன் செய்யும்
செயல் நிகரற்ற பெரும்
பாபமன்றோ?

அவதார புருஷர்கள் பலர்
அவதரித்த அவணிதனில்,
இக்கொடுங் கோல் ஆட்சியில்
உயிர் பூக்கள் அடையும்
வேதணையை வேள்வியில்
இட்டுப் பொசுக்க ஒருவரும்
அவதாரம் எடுக்காதது ஏனோ???

எழுதியவர் : கவி பாரதீ (19-Jul-22, 12:35 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 60

மேலே