சேர்க்கையில் உலகு

மனமும் மனமும் சேரவில்லை என்றால்
உன்னத காதல் உருவாவ தில்லை
நட்பும் நட்பும் கூடாது போயின்
நல்ல நண்பர்கள் உருவாவ தில்லை
தூய உள்ளம் இல்லாது போயின்
உயர்ந்த மனிதர்கள் உருவாவ தில்லை
காற்றும் பறவையும் இல்லாது போயின்
பூவின் மகரந்தம் சேருவதில்லை மகரந்தம்
சேராது போயின் காயும் கனியுமில்லை
நல்லோர் சேர்க்கை இல்லாது போயின்
நல்ல மனிதர்கள் உருவாவ தில்லை
ஆணும் பெண்ணும் கூடாது போயின்
அவனியில் மானுடம் உருவா வதில்லை
இறையோடு இவன் உள்ளம் சேராவிடில்
இறைக்கேதும் நட்டம் இல்லை இவன்
சம்சார சமுத்திரத்தில் வந்து வந்து சேர்வான்
சுக துக்கத்தில் மூழ்கி கிடப்பான்
அக்கறையாம் சுவர்க்கம் சேராது
அணுவும் அணுவும் சேராது போயின்
அணு சக்தி என்பது ஏதுமில்லை

இப்படி சேர்க்கையின் பின்னே உலகு
சுழலு கின்றது உலகு உள்ளவரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jul-22, 6:09 am)
பார்வை : 50

மேலே